மிட்டாய் கவிதைகள்!

கரும்பலகை இந்தியர்கள்!

July 22, 2013

BlackBoardSept06

வெள்ளையன் ஒருகால் வைக்க, காணாமற்போன
கருப்பனைக் கண்டுகொள்ள வில்லை!

கண்முன்னே பலரை மறைத்தபோது, கைகட்டி
தலைகுனிந்து அசையா திருந்தோம்! 

ஏறக்குறைய அனைத்தும் அழியவே, (கண்)நீருடன்
அழிக்க வருகிறது கோவம்!

அவனிடம் கற்றது ஆயிரம்தான் எனினும்
அழிக்க, தொலைகிறதே ஆயுள்!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்